மாரவிலில் 1,846 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் ஐவர் கைது – லொறியும் கைப்பற்றல்



கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1,846 கிலோ 830 கிராம் பீடி இலைகளுடன் ஐந்து சந்தேகநபர்களை மாரவில பொலிஸார் நேற்று (06) செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

மாரவில, லன்சிகம கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது, லொறியில் ஏற்றிச் செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த 48 உர மூடைகளில் அடைக்கப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டுவெல்லகம, நாத்தாண்டியா, வாய்க்கால் மற்றும் கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைளில் ஈடுபட்டு வருகின்றனர்.