
சரண குணவர்தனவின் மனைவி உட்பட மூன்று சந்தேக நபர்களை அக்டோபர் 20 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி, நீதிமன்ற ஊழியர் மற்றும் பதிவாளர் ஆகியோர், இலஞ்சம் மற்றும் கையூட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை 20 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். பொதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இவர்கள், 100 ரூபா இலஞ்சம் கொடுத்ததாகவும் பெற்றதாகவும் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதேவேளை, முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












