
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெர்குஸன் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 251 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14ஐச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஆவார் .
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.












.jpg)