
ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று (07) அழைக்கப்பட்ட போது, ஞானசார தேரர் காவி ஆடை களையப்பட்டு, சிறைச்சாலை ஆடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராகத் தனது கட்சிக்காரரான தேரர் தற்போது உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவரது சட்டத்தரணி, அதற்கான தீர்ப்பு கிடைக்கும் வரை இந்தத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.












