
மனிதக் கொலையுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி இங்கிரிய, ஹந்தபாங்கொட பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக நபரொருவர் உயிரிழந்துள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியசாலைப் பொலிஸாரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இங்கிரிய பொலிஸ் நிலையத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கண்ட குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (14) காலை இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தபாங்கொட பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிரிகல, ஹந்தபாங்கொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபராவார்.
இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








.jpeg)
.jpg)


