சபாநாயகர் பதவி விலக வேண்டும் அல்லது 50 குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்!


சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கையளிக்கப்படவுள்ள மீள்திருத்தப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஒழுக்கயீனம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நீக்கிக் கொண்டு நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை நடத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் விவாதத்தின்போது அவர் சபைக்கு தலைமைத் தாங்குவது முறையற்றது.

நாகரிகமான அல்லது தூய நல்லாட்சியே அரசாங்கத்தின் செயற்பாடாக இருக்குமாக இருந்தால்இ தற்போது செய்ய வேண்டியது சபாநாயகர் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகும். அவ்வாறில்லையென்றால்இ தனக்கு எதிரான 50 குற்றச்சாட்டுக்களுக்குப் பயமின்றி முகங்கொடுக்க வேண்டியது மட்டுமேயாகும் என ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது சுமத்தப்பட்டுள்ள தனிப்பட்ட ஒழுக்கக்கேட்டுக் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைஇ குற்றச்சாட்டுக்கு உள்ளான சபாநாயகரே தலைமை தாங்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுப்பது ஜனநாயகத்திற்குள் எதிர்க்கட்சிக்கு உள்ள உரிமையின் மீது விடுக்கப்பட்ட பாரிய தாக்குதலாகும் என நாம் வலியுறுத்துகிறோம்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரிப்பதற்காக அரசாங்கம் முன்வைத்த காரணங்கள் எந்தவொரு தர்க்கத்திற்கோ அல்லது நியாயத்திற்கோ உட்பட்டவை அல்ல. சட்ட வல்லுநர்களின் கருத்துப்படிஇ நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எவையும் நீதித்துறை நடவடிக்கைக்கு உட்பட்டவை என அரசாங்கம் முன்வைக்கும் வாதம் எந்த வகையிலும் உண்மையானதல்ல.

அதேபோன்றுஇ அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்த வாதம் தகர்ந்து போவதற்குரிய மற்றொரு காரணம் என்னவென்றால்இ இக்குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாக அமைந்தது சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதமொன்றுக்கு அமைய தயாரிக்கப்பட்ட 'சபாநாயகர் குறித்த இரகசியத் தகவல்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படுவது குறித்த விசாரணையின் அறிக்கை' எனும் பாராளுமன்ற அறிக்கை மூலாதாரமாக அமைந்துள்ளமையாகும்.

மேற்படி விடயத்தைக் கருத்திற்கொண்டுஇ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணைகள் ஆணைக்குழுவானது சபாநாயகருக்கு எதிராக விசாரணையொன்றை நடாத்தும் தருணத்தில் சபாநாயகர் அந்தப் பதவியில் கடமையாற்றுவது தார்மீகமானது அல்ல என்பது எதிர்க்கட்சியின் நிலைப்பாடாகும். சபாநாயகர் குறித்த விசாரணை நடாத்தப்படும் காலப்பகுதியிலாவது பதவியிலிருந்து விலக வேண்டும். அத்தகைய தார்மீகப் பண்பான செயற்பாடு காணப்படாதவிடத்து எதிர்க்கட்சிக்குரிய உரிமையானது இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாகும்.

அதற்கமையஇ இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது இம்மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டதோடுஇ கடந்த 12 ஆம் திகதியன்று பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டது. பின்னர் சபாநாயகர் நாட்டைவிட்டுப் வெளியில் சென்றிருந்த வேளையில் பிரதி சபாநாயகரின் தலைமையில் 12 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அல்லது கூற்றுகள் நீதித்துறை நடவடிக்கைகளுடன் முரண்படுகிறதா என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரித்து அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் குழுக் கூட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்தவாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவரை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து சபாநாயகரின் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் சபாநாயகரதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடானதுஇ சட்டமா அதிபரிடம் விசாரித்து செயற்படுவது அவசியமில்லை என்பதுடன்இ குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் திருத்தம் செய்து வழங்குவார்களாயின் மாத்திரம் அது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு இயலுமை உள்ளதென்பதாகும். இது குற்றச்சாட்டுக்குள்ளான நபரே தனது குற்றச்சாட்டை விவாதிப்பதைத் தவிர்ப்பதற்குக் கூட்டத்தை நெறிப்படுத்திப் பெற்றுக்கொண்ட தீர்மானமாகும்.

சபாநாயகருக்கு எதிராக நிலவும் பாரிய குற்றச்சாட்டுக்களை நீக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் சதித்திட்டத்திற்குப் பணிந்துஇ அரசாங்கம் பரிந்துரைக்கும் முறையிலோ அல்லது அரசாங்கத்திற்கு விருப்பமான முறையிலோ குற்றச்சாட்டுக்களைத் திருத்துவதற்கோ அல்லது நீக்குவதற்கோ எதிர்க்கட்சி தயாராக இல்லை என்பதை வலியுறுத்துகிறோம்.

நாகரிகமான அல்லது தூய நல்லாட்சியே அரசாங்கத்தின் செயற்பாடாக இருக்குமாக இருந்தால்இ தற்போது செய்ய வேண்டியது சபாநாயகர் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகும். அவ்வாறில்லையென்றால்இ தனக்கு எதிரான 50 குற்றச்சாட்டுக்களுக்குப் பயமின்றி முகங்கொடுக்க வேண்டியது மட்டுமேயாகும். அரசாங்கம் எடுத்துள்ள மேற்படி தீர்மானத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.