திஸ்ஸமஹாராம நீர்த்தேக்கத்தில் முதலையிடம் சிக்கிய 54 வயது நபர் – உயிருடன் மீட்ட பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர்



திஸ்ஸமஹாராம நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த 54 வயதுடைய நபர் முதலையிடம் சிக்கிய நிலையில், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் அவரை உயிருடன் மீட்டுள்ளனர்.

நேற்று (06) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், அக்குறுகொட பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் எதிர்பாராதவிதமாக முதலையிடம் சிக்கியுள்ளார்.

சம்பவத்தைக் கண்ட பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு, அவரை பாதுகாப்பாக மீட்டதுடன், அவசர சிகிச்சைக்காக திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

உயிர்காப்புப் பணியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளான ரஞ்சித், விக்ரமநாயக்க மற்றும் தில்ஷான் ஆகியோரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட நபர் அவசர சிகிச்சைக்காக உடனடியாக திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு காயமடைந்தவர் அக்குறுகொட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது, உயிர்காப்பு

ப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகளான ரஞ்சித், விக்ரமநாயக்க மற்றும் தில்ஷான் ஆகியோரின் சாமர்த்தியமான நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.