களுவாஞ்சிகுடி ரொஹான் கல்விக் கூடத்தினால் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் மாணவர்கள் கௌரவிப்பு


(சித்தா)

களுவாஞ்சிகுடி ரொஹான் கல்விக் கூடத்தினால் 2026 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் 25 பேர் இன்று 18.10.2026 கௌரவிக்கப்பட்டனர். களுவாஞ்சிகுடி ரொஹான் கல்விக் கூடத்தின் பணிப்பாளர் லோ.கௌதமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் பா.வரதராஜன் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை அதிபர்களான எம்.பஞ்சலிங்கம், எஸ்.திருநாவுக்கரசு ஆகியோருடன் கல்விக் கூடத்தின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து மாணவர்களைக் கௌரவித்தனர்.

மேற்படி நிகழ்வானது இம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த கலாதேவி லோகேஸ்வரன் அவர்களின் எற்பாட்டில்  நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த வகையில் சம்பிரதாய நிகழ்வுகளுக்கு அப்பால் மாணவர்களால் கலைநிகழ்வுகளும், விருந்தினர்களின் விசேட உரையும் இடம்பெற்றதுடன் விசேட நிகழ்வாக 2026 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் 25 பேர் நற்சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியை கலாதேவி லோகேஸ்வரன் பெற்றோர்களினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.