
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயர் எஞ்சின் திறன் கொண்ட 5 மோட்டார் சைக்கிள்களுடன், போலி பதிவுச் சான்றிதழ்களைத் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணக் வலய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, சனிக்கிழமை (17) கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுத்து வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயர் எஞ்சின் திறன் கொண்ட 5 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சட்டவிரோதமான முறையில் போலி பதிவுச் சான்றிதழ்களைத் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதேபகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









.jpg)


