
வாதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியின் வடுவ சந்தியில் நேற்று (05) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியைக் கடந்து சென்ற குறித்த வயோதிபர் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வாதுவை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாதுவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.












