பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்று வருகின்றது.
இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிநடத்தலின் கீழ் சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
730 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் அமைந்துள்ள 05 காணித் துண்டுகளைக் கொள்வனவு செய்தமையின் ஊடாகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் குற்றம்சாட்டி, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpg)