வெல்லம்பிட்டியில் 78 லீற்றர் கசிப்புடன் 40 வயது நபர் கைது



வெல்லம்பிட்டி, மீத்தோட்டமுல்ல பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 78 லீற்றர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (06) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

வலன மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே 104 போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 78 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மீத்தோட்டமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
வெல்லம்பிட்டியில் 78 லீற்றர் கசிப்புடன் 40 வயது நபர் கைது
சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட கசிப்புடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.