தனமல்விலவில் 78 கிலோ கஞ்சாவுடன் 54 வயது சந்தேகநபர் கைது!



தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபகெம பகுதியில் நேற்று வியாழக்கிழமை (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பெருமளவு கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 78 கிலோகிராம் 35 கிராம் கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஹம்பகமுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை (16) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.