கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சவூதி மன்னருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள சிறப்புக் கோரிக்கைக் கடிதத்தை, பிரதி சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற தூதுக்குழுவொன்று நேரில் சென்று கையளிக்கவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட சட்ட மற்றும் இராஜதந்திரப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடிதத்தை யார் தலைமையிலான குழு வழங்கவுள்ளது என்பது ஒரு பிரச்சினையல்ல. அக்குழுவுக்கு பிரதமர் தலைமை தாங்க வேண்டுமெனில் அது குறித்து சிந்திக்கலாம்.
அதேவேளை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மூலமாகவும், மேலும் பல இராஜதந்திர வழிகளினூடாகவும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மரண தண்டனை தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சவூதி மன்னருக்கே உள்ளதால், அதனைப் பயன்படுத்தி குறித்த இளைஞரைக் காப்பாற்ற அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
இதன் போது, பல மாதங்களின் பின்னர் அனோஜன் தனது சகோதரருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். தான் வேறு ஒரு சிறை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள கைதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனோஜனுக்குக் காயம் ஏற்படுத்தினால் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்ற தவறான வழிகாட்டல் அங்குள்ள சில கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
இவ்விவகாரம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு உடனடியாகத் தலையிட்டு, சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வேறொரு நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் நீதித்துறைக்கு உட்பட்ட ஒரு விவகாரத்தில் நாம் மிகவும் அவதானமாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். இந்த உணர்வுபூர்வமான விடயத்தை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்த முற்படாமல், ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.


.jpg)










.jpg)