
பௌத்த மதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் போக்கானது விடுதலை புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்கு சமமானவையாகும் என ஜனநாயகத்திற்கான இலங்கையின் சமூக ஊடகவியலாளர்களின் ஊடக அமைப்பின் பணிப்பாளர் பி டபிள்யூ டி வெலிகல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் புதன்கிழமை (14) நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
உலகில் ஒரே பௌத்த இராச்சியமான இந்நாட்டில் பௌத்த மதத்திற்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகி வருகின்றது. குறிப்பாக பௌத்தமத தேரர்களுக்கு அவர்களது ஆடை தொடர்பிலான பிரச்சினை முக்கியமானதாக உருவெடுத்துள்ளது.
தற்போதைய ஆட்சியில் பௌத்த தேரர்கள் தங்களது உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது பௌத்த தேரர்களின் ஆடையில் கை வைத்துள்ள அரசாங்கமும் விடுதலை புலிகள் அமைப்பினரும் ஒரே விதத்திலே பௌத்த மதத்திற்கு தீமைகளை ஏற்படுத்தியுள்ளனர். இவ்விரு அமைப்பினரும் ஒரே வகையினர். இவர்கள் பௌத்த மதத்துக்கு நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.
இன்று ஆட்சியில் இருக்கும் 159 பேரும் பௌத்த மதத்தின் மூலமாக அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு பொத்திற்கு எதிராகவே செயற்படுகின்றனர். இன்று எங்களை நகையாடுகின்றனர். 159 பேரிடமும் நாங்கள் சொல்லிக் கொள்வது இது சிங்கள பௌத்த நாடு.
இந்த அரசாங்கத்துக்கு தேரர்களின் ஆடை தொடர்பில் வன்மம் உள்ளது. இவ்வாறு கூறுவதற்கு காரணங்கள் உள்ளன. அதாவது இவ் அரசாங்கத்தின் சபாநாயகர் சமூக ஊடகங்களில் இது சிங்கள பௌத்த நாடு இல்லை என்றார். அதனை போலவே அமைச்சர்கள் சிலை வழிபாடு முட்டாள்தனமானது என்கின்றனர்.
இன்னும் சிலர் போதிமரம் வெறும் என்கின்றனர். இவற்றை விட பாராளுமன்றம் வந்தால் எங்கே பொதுபலசேனா சிங்ஹளே என்கின்றனர். எங்களுக்கு சிங்களே உள்ளது. உங்களிடம் என்ன உள்ளது. இவ்வரசாங்கத்திடம் நாங்கள் கேட்டு கொள்வது யாதெனில் பௌத்த தேரர்களின் ஆடையில் கை வைக்க வேண்டாம்.
அது அந்நியர்களினாலும் முடியாதது. கிராமத்திற்கு மிக அண்மைய இடம் விகாரைகள். அங்கு இருந்தே பௌத்த மதம் பரவலானது. அத்தகைய புனித இடத்தை இல்லாது செய்யாதீர்கள் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.
இவற்றை விட ஜனாதிபதி பேரணியின் போது நாட்டுக்கு சுகம் என்கிறார். உண்மையில் யாருக்கு சுகம் என நாட்டு மக்களிடம் வினவுகின்றோம். அத்தோடு அண்மையில் இடம்பெற்ற வர்த்தக சந்திப்பில் போது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வாய்ப்புண்டு என்றார்.
ஆனால் முன்னதாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று வளர்ச்சியுற்ற நாடு இல்லை என அவரே கூறினார். இந்த பாதை ரணில் விக்கிரம சிங்க அமைத்து தந்ததாகும். ஜனாதிபதி மாற்றி மாற்றி கதைக்கின்றார். ஜனாதிபதி எதைக் கூறி ஆட்சிக்கு வந்தார் என்பதை மறக்க வேண்டாம் என கூறி கொள்கின்றோம் என்றார்.







.jpeg)




