ஓமந்தையில் மின்மாற்றியை உடைத்து பெறுமதியான உபகரணங்கள் திருட்டு – பொலிஸார் தீவிர விசாரணை



குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றி அகற்றப்பட்டிருப்பதாக இலங்கை மின்சாரசபைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற மின்சாரபையின் அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் தடயவியல் பொலிசாரின் உதவியுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த மின்மாற்றியானது மின்சாரதூணில் இருந்து அகற்றப்பட்டு, உடைக்கப்பட்டு அதில் இருந்த பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடிச்செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.