
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, சட்டவிரோதமாக மது தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான 'கோடா'வுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஹீனட்டியன ரம்ய தொட்டுபொல மற்றும் மோலகந்த ரம்ய தொட்டுபொல ஆகிய பகுதிகளில் இரண்டு திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக மது வடித்தலுக்குப் பயன்படுத்தப்படும் 932 லீற்றர் 'கோடா' (5 பீப்பாய்கள்) மற்றும் 67.5 லீற்றர் 'கோடா' (90 போத்தல்கள்) ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









.jpg)


