ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் – புதிய சட்டம் அமுலுக்கு!



ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (19) கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்

இச்சட்டமூலம் முதலாம் வாசிப்பிற்காக 2026.08.19 அன்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 2026.10.08 அன்று நடைபெற்றதுடன், திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் – புதிய சட்டம் அமுலுக்கு!
டது.

இதற்கமைய இச்சட்டத்தின் மூலம், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அடையாளம் காணப்பட்டுள்ள சட்டரீதியான, வியாக்கியானம் தொடர்பான, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள், சிங்கள மற்றும் ஆங்கில சட்டப் உரைகளுக்கு இடையிலான முரண்பாடுகள், ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது மற்றும் வழக்குத் தொடர்வதில் உள்ள சிக்கல்கள், இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகள், அத்துடன் மத்திய மின்னணு முறைமையின் ஊடாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையை மேலும் முறைப்படுத்துதல் என்பன நோக்கங்களாகக் கொள்ளப்படுகின்றன.

இத்திருத்தங்களின் மூலம் ஊழலுக்கு எதிராகச் செயற்படுவதற்காக இலங்கையில் உள்ள சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை திறம்படவும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புடனும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம், 2026 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமாக அமலுக்கு வருகின்றது.