
உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் சுமூகமான உறவுகளைப் பாராட்டினார். இச்சந்திப்பின் போது, பங்களாதேஷிற்கு இலங்கை அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவிற்கு உயர்ஸ்தானிகர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும்,குறிப்பாக விவசாயத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இரு நாடுகளின் அபிவிருத்தி முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதில் புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் உள்ள பங்களிப்பை இச்சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.







.jpg)




