
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்துக் கண்டறிவதற்காக, வலான ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட புலனாய்வாளர்கள் குழுவினர் அத்திணைக்களத்தின் கணினி அமைப்பிலுள்ள முழுமையான தரவுகளைப் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இப்பணியில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணினியியல் பீடப் பேராசிரியர்கள், இலங்கை கணினி அவசர காலப் பிரிவு அதிகாரிகள், 'GovTech' ஸ்ரீலங்கா மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் கணினி நிபுணர்கள் இணைந்து பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







.jpg)




