நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்க அபாயம் – நாளை அதிகாலை வரை அம்பர் எச்சரிக்கை !



நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (16) வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (17) சனிக்கிழமை அதிகாலை 01 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.