அநுராதபுரத்தில் தாமரை மலர் பறிக்கச் சென்ற படகு கவிழ்ந்து ஒருவர் பலி – இருவர் ஆபத்தான நிலையில்!



அநுராதபுரம் எப்பாவல பகுதியில் உள்ள குளம் ஒன்றில் தாமரை மலர்களை பறிப்பதற்காக வேண்டி மூன்று பேர் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளததுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.

எப்பாவல பொலிஸ் பிரிவில் உள்ள மெடியாவ குளத்தில் நேற்று வியாழக்கிழமை (15) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் எப்பாவல, கட்டியாவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடைய நபர் ஆவார்.

நீரில் மூழ்கிய மூவரையும் பிரதேசவாசிகள் மீட்டு அவசரமாக எப்பாவல வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, ஒருவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அடுத்த இரண்டு பேரையும் மேலதிக சிகிச்சைக்காக வேண்டி அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் எப்பாவல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.