கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்று நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!



நாடு என்ற ரீதியில் தவறாக நடந்த விடயங்கள் எவை, சரியாக நடந்த விடயங்கள் எவை என்பவற்றைப் புரிந்துகொள்வதற்கு Tear Drop Nation திரைப்படத் தொடர் முக்கியமானது என்றும், இதன் மூலம் எல்லாவற்றையும் விமர்சன ரீதியாகவும், சுயவிமர்சன ரீதியாகவும், ஆக்கபூர்வமாகவும் நேர்மையாகவும் தரமாகவும் கேள்வி எழுப்பி, இத்திரைப்படம் மூலம் பெற்றுத் தரப்படும் பாடங்களைக் கற்றுக்கொண்டு நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சரா கபீரினால் தயாரிக்கப்பட்ட “Tear Drop Nation“ திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஸாரா கபீர் தனது தனிப்பட்ட அரசியல் கருத்துக்களை ஒதுக்கிவைத்துவிட்டு, பாரபட்சமின்றி, உண்மையாக, வெளிப்படைத்தன்மையுடன் தனது கலைப்பணியை ஆற்றியுள்ளார். அதனால், Tear Drop Nation“ திரைப்படம் பெற்றுத் தரும் பாடத்தை சரியாகப் புரிந்துகொண்டு, நாட்டுக்காகவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும், ஒட்டுமொத்த மக்களையும் சுபீட்சமடையச் செய்வதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.