நுவரெலியா கிரகரி வாவியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு



நுவரெலியா - கிரகரி வாவியில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (6) பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் சடலத்தை வாவியிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த நபரின் மரணத்துக்கான காரணம் தெரியவராத அதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.