யாழ்ப்பாணம் கைதடியில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதி கோர விபத்து – இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!



யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (13) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.