(சித்தா)
வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர் சபையுடன் வெல்லாவெளி அனைத்துப் பொது அமைப்புக்களும் இணைந்து வெல்லாவெளியில் இலக்கிய கலாநிதி வெல்லவூர்க்கோபால் அவர்களுக்கு பெருவிழாவினை நடாத்தினர்.
வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் போ.சிவனேசராசா தலைமையில் கடந்த 11.10.2026 ஆம் திகதி வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வின் போது இலக்கிய கலாநிதி கவிக்கோ வெல்லவூர்க்கோபால் அவர்களின் 'வாழும் நினைவுகள்' அனுபவப் பகிர்வு மற்றும் 'வெல்லவூர்ச் சாகரம்' கவிக்கோ அமுதவிழா மலர் ஆகிய நூல்களின் அறிமுகமும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வின் வெல்லாவெளி பொது அமைப்புகளின் தலைவர்,செயலாளர்கள் முன்னிலை வகிக்க சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, சட்டத்தரணி மு.கணேசராசா, போராசிரியர் நா.வாமன், ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் ம.தங்கையா, ஓய்வுநிலை அதிபர் த.விவேகானந்தம், ஓய்வு நிலை அதிபர் த.கணேசமூர்த்தி ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மனின் விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமான நிகழ்வு மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், சிவசிறி வே.கு.நாராசா பிரணவ சர்மா அவர்களின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆசிரிய ஆலோசகர் சோ.பத்மராசாவின் வரவேற்புரை, தலைமையுரை, ஆசிரியர் இ.தனுராஜின் நூல் அறிமுகவுரை என்பவற்றின் பின்னர் நூல்கள் வழங்கப்பட்டு அதிகள் உரை, கலாநிதி கவிக்கோ வெல்லவூர்க்கோபாலின் ஏற்புரையும், வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர் சபையின் செயலாளர் இ.ஜெயநீதனின் நன்றியுரையுடன் பெருவிழா நிறைவுற்றது.





.jpeg)
.jpeg)
.jpeg)




.jpeg)
.jpeg)






.jpg)






