
இலங்கையுடனான இருதரப்பு இராஜதந்திர உறவுகளைக் கருத்தில்கொண்டு, கச்சத்தீவு மற்றும் கடல்சார் மீன்பிடி உரிமைகள் தொடர்பான 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்களை மீள்பரிசீலிக்கும் எண்ணம் இந்திய அரசுக்கு இல்லை என அந்நாட்டு சட்டமா அதிபர் ஆர். வெங்கடரமணி இந்திய உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தங்களை செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இடம்பெற்றபோதே இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் இராஜதந்திர வழிகள் மூலம் தொடர்ந்து கையாளப்பட்டு வருவதாகவும், எனினும் தனது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கையை இந்தியாவால் கட்டாயப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளமை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைவதற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும், எல்லை தாண்டி மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் மீனவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்களின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மை தொடர்பில் உச்ச நீதிமன்றம் இதுவரை தீர்ப்பு வழங்கவில்லை. 2008ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இம்மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணை 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள












