
நிகவரெட்டிய பொலிஸ் பிரிவின் கந்தேகெதர பகுதியில் புதையல் தோண்டிய 03 சந்தேக நபர்களை பொலிஸார் திங்கட்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
நிகவெரட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் சில அகழ்வுப் பணிக்கான உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நிகவெரட்டிய பகுதியைச் சேர்ந்த 21, 24 மற்றும் 51 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நிகவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












.jpg)