100 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் 55 வயது நபர் கைது!



கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரூபன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படை அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.