காத்தான்குடியில் 10.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 44 வயது நபர் கைது!



காத்தான்குடி பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை 10 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (6) கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி வழிகாட்டலில், குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டைத் திடீரென முற்றுகையிட்டனர்.

இதன்போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயதுடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் போதைப்பொருள் வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் வெளிவந்தவர் என்பதும், நீண்டகாலமாக இந்த சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலதிக விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.