
அஸ்வெசும திருத்தப்பட்ட பயனாளிப் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகளை நவம்பர் 11ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கோடவெலிகெதர தெரிவிக்கையில், அஸ்வெசும திருத்தப்பட்ட பயனாளிப் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகளை அந்தந்த பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்
மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கு பத்து நாட்கள் வழங்கப்பட்டுள்ளதோடு இறுதித் திகதி நவம்பர் 11 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டுக் குழுக்களுக்குப் பிரதேச செயலாளர்களே தலைமை தாங்குவதால், மேன்முறையீடுகள் அந்தந்தப் பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
திருத்தப்பட்ட பட்டியலின்படி, 991,800 பேர் அஸ்வெசும நன்மைகளைப் பெறத் தகுதியுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னர் தெரிவுசெய்யப்பட்ட மேலும் 265,315 நபர்களும் தொடர்ந்து கொடுப்பனவைப் பெறுவார்கள்.
திருத்தப்பட்ட பயனாளிப் பட்டியலை நவம்பர் 27 ஆம் திகதி வெளியிட நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்த்துள்ளதாகவும், தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நவம்பர் மாத இறுதி வாரத்தில் வழங்கப்படவுள்ளன.
இதற்கிடையில், முதற்கட்ட மதிப்பீடுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 700,000 பேரை உள்ளடக்கிய மற்றொரு பட்டியல் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்டதும் அப்பட்டியல் வெளியிடப்படும் என்றார்.










.jpg)

