2013ஆம் ஆண்டு GTA 5 வெளியானதைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் PlayStation 5 மற்றும் Xbox Series X/S சாதனங்களுக்காக நள்ளிரவில் விளையாட்டு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனை மாநிலமான லியோனிடாவில் (Leonida) இதன் கதைக்களம் அமைந்துள்ளது. லூசியா கமினோஸ் மற்றும் ஜேசன் டுவால் ஆகிய இரு முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய பதிப்பில் மேம்படுத்தப்பட்ட பொலிஸ் விசாரணை முறைகள், சமூக ஊடக வசதிகள், யதார்த்தமான கதாபாத்திரச் செயற்பாடுகள் மற்றும் புதிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெளியீட்டுக்கு முன்னரே முன்பதிவுகள் மூலம் சுமார் 1.54 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும், சுமார் 1.6 கோடி பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், Metacritic தளத்தில் 100க்கு 99 புள்ளிகளையும், IGN தளத்தில் 10க்கு 10 புள்ளிகளையும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், விளையாட்டின் சேமிப்பகத் தேவை 212GB வரை இருப்பதாகவும், சர்வதேச சந்தையில் ஆரம்ப விலை 79.99 அமெரிக்க டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Windows கணினிகளுக்கான வெளியீட்டுத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


.jpg)










