
மாத்தறை, மிரிஸ்ஸ, தலாரம்ப கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட 17 பொதிகளுக்குள் 'ஐஸ்' போதைப்பொருள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து நேற்று பிற்பகல் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இதற்குப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டிருந்தது.
இதன்போது, போதைப்பொருள் அடங்கிய மூட்டைகளைக் கொண்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், போதைப்பொருள் அடங்கிய 17 மூட்டைகள் மீட்கப்பட்டதுடன், அவற்றை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவற்றுள் 'ஐஸ்' போதைப்பொருள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த போதைப்பொருள் தொகையைக் கொண்டு செல்வதற்காக அவ்விடத்திற்கு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு வேன்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







.jpg)




