2027 வரவு–செலவுத் திட்டத்தில் கல்விக்கு ரூ.749 பில்லியன் ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி அறிவிப்பு!
2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்காக 749 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் தேசியப் பாடசாலையின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நவம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் வரலாற்றில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய நிதித் தொகை இதுவாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், அதில் 562.4 பில்லியன் ரூபா பாடசாலைக் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அனைத்துப் பிள்ளைகளும் 13 ஆண்டுகள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும் என்பதுடன், தரமான கல்வியைப் பெற்றுக்கொள்வது ஒவ்வொரு பிள்ளையினதும் அடிப்படை உரிமையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பிள்ளைகள் தமது கனவுகளை நனவாக்கக்கூடிய வகையிலான கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் வேகமாக மாற்றமடைந்து வருவதால், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அழைப்பு விடுத்தார்.













