
அம்பலாங்கொடை பொதி விநியோக நிறுவனமொன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்றிலிருந்து, 31 கிலோ கஞ்சா கலந்த மதனமோதகத் தொகை காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய பகுதியிலிருந்து மருந்துப் பொருட்கள் எனக் குறிப்பிடப்பட்டு, பொதி விநியோக நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்தப் பொதி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய நேற்று (25) வியாழக்கிழமை பிற்பகல் பொலிஸார் சோதனை நடவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.
காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று, தென் மாகாண ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குறித்த பொதியைச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
இதன்போது, குறித்த பொதியினுள் 31 கிலோகிராம் 470 கிராம் நிறையுடைய 2,125 கஞ்சா கலந்த மதனமோதகப் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்காக ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.







.jpg)




