புத்தளம் கடற்பரப்பில் 3 கிலோவுக்கும் அதிக தங்கம் மீட்பு – கடத்தல் முயற்சியில் இருவர் கைது!



புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் இலங்கை கடற்படையின் வடமேற்கு கடற்படைக் கட்டளைப் பிரிவினால் நேற்று (17) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, தங்கக் கடத்தலில் ஈடுபட முயன்ற இரண்டு (2) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது மூன்று கிலோகிராமுக்கும் அதிகமான தங்கத் தொகை மற்றும் ஒரு டிங்கி படகு என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடல் மார்க்கமாக தென்னிந்தியாவிற்குக் கொண்டு செல்ல முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படும் இந்தத் தங்கத் கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வௌியிடப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.