45 வயது பெண் கொ லை – தப்பிச் சென்ற சந்தேகநபர் காட்டு யானை தாக்குதலில் காயம்!



எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹஇலுபள்ளம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (27) வெள்ளிக்கிழமை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மஹஇலுபள்ளம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த ஆண் ஒருவர், பணம் தொடர்பான தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்தப் பின்னர், சந்தேகநபர் அந்தப் பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்லும் வழியில், காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்து எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் விஷம் அருந்தியிருந்ததாக தெரியவந்துள்ளது. எப்பாவல பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.