பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழி சான்றிதழ் வழங்கும் சேவை நவம்பர் 7, 8ஆம் திகதிகளில் இடைநிறுத்தம் !



இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய மூலமான சான்றிதழ் வழங்கும் சேவை அடுத்த இரண்டு நாட்களுக்குச் செயற்படாது எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை (7) மற்றும் நாளை மறுதினம் (8) ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த இணையவழி சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

இணையவழி சான்றிதழ் வழங்கும் சேவை தொடர்பான தகவல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுப்பித்தல் பணிகள் காரணமாகவே இந்த இரு நாட்களிலும் இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாது எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.