மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளையம் மகா வித்தியலயத்தில் 80 ஆண்டு நிறைவை முன்னிட்டு ' அமுதவிழா நடைபவணி'

(சித்தா)

பட்டிருப்பு கல்வி வலயத்தின் செட்டிபாளையம் மகாவித்தியலயத்தில் 80 ஆண்டு நிறைவை முன்னிட்டு ' அமுதவிழா நடைபவணி' கடந்த 28.11.2026 ஆம் திகதி பாடசாலை அதிபர் சு.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மே.வினோராஜ், முன்னாள் கிழக்கு மாகாணச் செயலாளர் மூ.கோபாலரெத்தினம், முன்னாள் கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன்;, பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக உத்தியோகஸ்த்தர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகஸ்த்தர்கள், பெற்றோர்கள், புதிய, பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் அங்குரார்ப்பண நிகழ்வும், அமுதவிழா நினைவுப் பலகை திரை நீக்கமும் நடைபெற்றதுடன் பாடசாலையின் எட்டு தசாப்தகால கல்விப் பயணத்தில் பல்வேறு செயற்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் ஊர்தி ஊர்வலம் பழைய, புதிய மாணவர்களின் அளவற்ற மகிழ்சியுடன் களுதாவளை, குருக்கள்மடம் வரை சென்று பாடசாலை வளாகத்தை அடைந்தது.