மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு – தினமும் 80,000 பக்தர்களுக்கு அனுமதி!



மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று (17) நடை திறக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பூஜைகளுடன் திறக்கப்பட்டது.

முதல் நாளில் 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தினசரி 80,000 பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் 27 ஆம் திகதியன்று மண்டல பூஜை நடைபெற்று அன்றுடன் நடை அடைக்கப்படும்.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் திகதி ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.

இந்த நிலையில், கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு குற்றாலம் அருவியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி, மாலை அணிந்து தங்களது 48 நாள் விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

மங்​கல இசை மற்​றும் பக்​தர்​களின் சரண கோஷத்​தால் சந்​நிதானம் களைகட்​டியது.

இதனைத் தொடர்ந்து, புதிய மேல்​சாந்​தி​கள் பொறுப்​பேற்​றுக் கொண்​டனர்.

மங்​கல இசை முழங்க மேல்​சாந்தி பிரசாத் நம்​பூதிரி கோயில் கரு​வறையைத் திறந்து வைத்து நெய் தீபம் ஏற்​றினார்.

தொடர்ந்து 18-ம் படி வழியே கீழிறங்கி சென்று ஆழிகுண்​டத்​தில் தேங்​காய் விளக்​கில் தீபம் ஏற்​றினார். பின்பு ஐயப்​பன் விக்​கிரகத்​தின் மேல் பூசப்​பட்​டிருந்த விபூதி, ருத்​ராட்ச மாலை அகற்​றப்​பட்டு யோகநித்​திரை நிலை மாற்​றப்​பட்​டது.

இந்த விபூதி பக்​தர்​களுக்கு பிரசாத​மாக வழங்​கப்​பட்​டது.

புதிய மேல்​சாந்​தி​களாக சபரிமலைக்கு சுப்​பிரமணி​யன் நம்​பூதிரி, மாளி​கைப்​புரத்​தம்​மன் கோயிலுக்கு தாமோதரன் நம்​பூதிரி ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்டு இருந்​தனர்.

இவர்​கள் இரு​வரும் இரு​முடி கட்​டுடன் பதினெட்​டாம்​படி வழியே ஏறினர். இவர்​களை முன்​னாள் மேல்​சாந்​தி​களான பிரசாத் நம்​பூதிரி, மனு நம்​பூதிரி ஆகியோர் கரம் பிடித்து அழைத்​துச் சென்​றனர்.

பின்பு கரு​வறை முன்​புள்ள சோபானம் எனும் புனித படிக்​கட்டு அருகே அமர வைத்து தந்​திரி கண்​டரரு பிரம்​மதத்​தன் இரு​வருக்​கும் சந்​தன அபிஷேகம் செய்து புனிதநீர் தெளித்​தார்.

பின்​னர், அவர்​களை கரு​வறைக்​குள் அழைத்​துச் சென்று மூல மந்​திரத்தை காதில் உப​தேசித்​தார்.

முதல்நாளான நேற்று காலை​யில் இருந்தே நிலக்​கல்​லில் பக்​தர்​கள் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது. இருப்​பினும் மாலை​யில் நடை திறக்​கப்​பட்​ட​தால் பிற்​பகலில் இருந்தே பம்​பைக்​குச் செல்ல அனுமதிக்​கப்​பட்​டனர்.

மண்​டல வழிபாட்​டுக் காலம் தொடங்​கிய​தால் சந்​நிதானம், பம்பை, நிலக்​கல், எரு​மேலி மட்​டுமல்​லாது வனப்​பாதை மற்​றும் தேனி உள்​ளிட்ட பல்​வேறு வழித்​தடங்​களும் பக்​தர்​கள் வருகை​யால் களை கட்​டியது