பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறது.கைதுகளும் அதற்கமைவாகவே இடம்பெறுகின்றன. பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த கால தலைவர்களின் ஆட்சியின்போது இவ்வாறான தன்மை இருக்கவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரச நிறுவனங்களை முழுமையாக அரசியல்மயப்படுத்தியுள்ளார்.
அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காவும், அரசியல் பழிவாங்கலுக்காக அரச நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.இதன் விளைவு எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிப்பெறுவார்.அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்போம்.அதற்கான நடவடிக்கைகளை இந்த மாதம் முதல் ஆரம்பிப்போம்.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.மக்களின் எதிர்ப்பை முடக்குவதற்காகவே பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்விரு சட்டமூலங்களும் சட்டமானால் ஜனநாயகம் மரணிக்கும் என்றார்.


.jpg)










