திருக்கோவில் விஸ்வ துளசி வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர், பாடசாலையின் கல்வி வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.
அத்துடன், புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில், பாடசாலையின் பழைய கட்டடங்களைப் புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













