வானிலை அறிவிப்பு



ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதிகாலை வேளைகளில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டமான நிலைமை காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சீரற்ற வானிலை நிலவும் காலப்பகுதிகளில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.