நாளை நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்


பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்குத் தமது பிரச்சினைகள் குறித்து அறிவித்த போதிலும், இதுவரை அதற்கு கவனம் செலுத்தப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்தார்.

இதற்கமைய, நாளைய தினம் இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தம்மிக முனசிங்க குறிப்பிட்டார்.