சுரவணையடியூற்று விநாயகர் வித்தியாலயத்திற்கு பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தினால் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு

(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள சுரவணையடியூற்று விநாயகர் வித்தியாலயத்திற்கு பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தினால் அலுவலக பாவனைக்கான அலுமாரியும் (Cupboard) மாணவர்களின் கற்பித்தல் செயற்பாட்டிற்கான வெண்பலகைகள் (White board) முதலுதவிப்பெட்டி என்பன வழங்கிவைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் த.திருவருள் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக தாய்ச்சங்கத்தின் தலைவர் பெஞ்சமின் பாலா அவர்களின் வழிகாட்டலில் பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தின் பழுகாமம் கிளைத் தலைவர் ஆ.புட்கரன், செயலாளர் ஏ,நா.இந்திரநாதன் ஆகியோரால் பாடசாலையின் அதிபர் த. திருவருள் அவர்களிடம் அவை கையளிக்கப்பட்டன. அவற்றைப் பெற்றுக்கொண்ட அதிபர் பழுகாமம் பரம்பரை ஒன்றிய செயற்பாடுகளை வரவேற்று உரையாற்றினார். மேலும் கடல் கடந்து வாழ்ந்த போதும் தனது கிராமமும் அதுசார்ந்த கிராமங்களும் கல்வியில் மேலோங்க வேண்டும் எனும் சிந்தனையோடு வாழும் பெஞ்சமின் பாலா அவர்களுக்கு விஷேட நன்றியினை தெரிவித்தார். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தரம் ஐந்து ஆரம்பிக்கப்பட்டு முதல்முறை தோற்றிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில்  உருத்திரகுமாரன் - திவேஸ் எனும் மாணவன் வெட்டுப்புள்ளிக்கு (136) மேல் பெற்று பாடசாலையில்   வரலாற்று சாதனையையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது