சிறுவர் ஒருவர் தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணொளி ஒக்டோபர் 31ஆம் திகதி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, எண்டேரமுல்ல பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரான பெண் அதே தினத்தில் கைது செய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுவரும் பொலிஸாரின் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பெண்ணும் பாதிக்கப்பட்ட சிறுவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த தாக்குதல் சம்பவம் ஒக்டோபர் 28ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













