சந்தேக நபர்களைச் சந்தேக நபர்களாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைத் துன்புறுத்தி வாக்குமூலம் பெற முயலக் கூடாது என்றும் பொலிஸ் மா அதிபர் அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஸ_ம் செயலி கலந்துரையாடலின் போதே இந்த முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்தபோது இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிர்ப்புக்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள குறைபாடுகள் வெளி வந்ததை அடுத்து இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஒருவர் குற்றவாளி என்று முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது என்றும், சந்தேக நபர்களின் உரிமைகளைப் பொலிஸ் அதிகாரிகள் முழுமையாகப் புரிந்துகொண்டு சட்ட வரம்பிற்குள் மட்டுமே செயற்பட வேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கமோ, அமைச்சோ அல்லது தானோ எந்தவிதமான கைது அல்லது வழக்குத் தாக்கல் இலக்குகளையும் பொலிசாருக்கு வழங்கவில்லை என்பதை சிரேஷ்ட பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்குக் பொலிஸ் மா அதிபர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், சந்தேக நபர்களைத் தாக்கியோ அல்லது சித்திரவதை செய்தோ வாக்குமூலங்களைப் பெற முற்படக் கூடாது எனவும், அவ்வாறு பெறப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றில் சட்டப்பூர்வமானவையாக ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் தொடர்பில் உரிய பதிவுகளைப் பராமரிக்கத் தவறியமை மற்றும் அவர்களுக்குச் சிகிச்சை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டமை போன்ற சம்பவங்கள் குறித்த விளக்கக்காட்சியொன்றும் இக்கலந்துரையாடலின் போது சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.