
மஸ்கெலியா, தோதலாவத்தை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (17) மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 27, 28 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.












