
திவுலபிட்டிய, வெவகெதர பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நான்கு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கம்பஹா தீயணைப்புப் பிரிவிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களும், நீர்கொழும்பு தீயணைப்புப் பிரிவிலிருந்து ஒரு தீயணைப்பு வாகனமும் தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
எவ்வாறாயினும், தீயணைப்புப் பிரிவினரும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












