
சிறிது மழை பெய்யும் போது கூட கொழும்பு நகரின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதற்குக் காரணமாக அமைந்துள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் நீர் விநியோகம் மற்றும் வடிகால் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க தெரிவிக்கையில்,
கொழும்பு நகரில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ளோம். அண்மையில் மட்டக்குளியிலுள்ள ஸ்ரீ விக்கிரம வீதி மற்றும் பிமெல்வத்தை வீதி ஆகியவற்றில் அடையாளம் காணப்பட்ட சட்டவிரோதக் கட்டுமானங்கள் அகற்றுப்பட்டுள்ளன.
இத்தகைய சட்டவிரோதக் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ள அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு அறிவித்தல்களைப் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் அறிவித்தல்களின் பிரகாரம் அவை அகற்றப்படாது விட்டால் அவற்றை சட்டரீதியாக அகற்றுவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.










.jpg)

